அமெரிக்காவில் குளிர் தாங்க முடியாமல் கரடி ஒன்று காரை திறந்து உள்ளே நுழைந்த வீடியோ தற்போது வைரலாகி உள்ளது.
சமீபத்தில் மிகப்பெரும் காட்டுத்தீயை சந்தித்த அமெரிக்காவின் கலிஃபொர்னியா மாகாணம் தற்போது பனிப்பொழிவை சந்தித்து வருகிறது. டிசம்பர் மாதம் அதிகம் பனி பொழியும் காலம் என்பதால் காட்டிலிருந்து வழிதவறி வந்த கரடி ஒன்று குளிர் தாங்க முடியாமல் கஷ்டப்பட்டுள்ளது.
அந்த பக்கம் வீட்டின் முன் பக்கம் நின்று கொண்டிருந்த காரை தனது முன்னங்கால்களால் திறந்து உள்ளே சென்று அமர்ந்து கொண்டது கரடி. உள்ளே சென்ற கரடி வெளியே வர தெரியாமல் இருந்தபோது காரின் உரிமையாளர் மற்றொரு பக்க கதவை திறந்து விட்டு விட்டு ஓடி விட்டார். அதிலிருந்து வெளியேறிய கரடி மீண்டும் காட்டுப்பக்கமாக நடை போட தொடங்கியது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
A curious bear was seen lumbering up to a black SUV, pulling on the front door's handle and then climbing inside the vehicle, which was parked in a Tahoe, California, driveway. pic.twitter.com/cQlBU2usfC