திருப்பதி, ஏழுமலையான் கோவிலில் கனமழை.. நான்கு மாட வீதிகளை சூழ்ந்த வெள்ளம்..!

Webdunia
ஞாயிறு, 27 ஆகஸ்ட் 2023 (13:00 IST)
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் திடீரென பெய்த கன மழை காரணமாக நான்கு மாட வீதிகளில்  வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனை அடுத்து பக்தர்கள் கடும் அவதியில் இருப்பதாக கூறப்படுகிறது. 
 
கடந்த சில நாட்களாகவே தமிழகம் போலவே ஆந்திராவிலும் சில பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் நேற்று திடீரென திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கன மழை பெய்தது. 
 
விடிய விடிய பெய்த இந்த மழை காரணமாக ஏழுமலையான் கோவிலில் நான்கு மாடவீதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. மேலும் மழை வெள்ளத்தில் மூழ்கிய  கோவில் சுற்றுவட்டார பகுதிகளை மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
 
திடீரென கொட்டி தீர்த்த கனமழையால் பக்தர்கள் கடும் அவதியில் இருப்பதாகவும்  இதனால் திருப்பதிக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்