தமிழகத்தில் நாளை முதல் மீண்டும் கனமழை: வானிலை மையம் தகவல்..!

ஞாயிறு, 20 ஆகஸ்ட் 2023 (14:21 IST)
நாளை முதல் தமிழகத்தில் மீண்டும் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. 
 
குறிப்பாக சென்னையில் தினந்தோறும் இரவில் மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மேற்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக தமிழகம் புதுவையில் நாளை முதல் கன மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
குறிப்பாக நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சை, அரியலூர், நீலகிரி, கடலூர்  ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது  
 
சென்னையை பொருத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்