ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டால் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அவ்வாறு அவர் போட்டியிட்டால் திமுக காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வலிமையான வேட்பாளரை நிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட்டால் அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன் என நாம் தமிழர் கட்சியின் சீமான் தெரிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இருப்பினும் சீமான் இதுவரை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு ஒருமுறை கூட வென்றதில்லை என்பதால் அவரது போட்டியை பெரிதாக எடுத்துக் கொள்ள தேவையில்லை என பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.