வெள்ளத்தை முன்கூட்டியே அறியும் செயலி.. மத்திய அரசு அறிமுகம்..!

வெள்ளி, 18 ஆகஸ்ட் 2023 (10:26 IST)
நாட்டில் ஏற்படும் வெள்ளத்தை முன்கூட்டியே அறியும் வகையில் புதிய செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.  
 
கன மழை பெய்யும் நேரத்தில் எல்லாம் வெள்ளம் வந்து பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறது என்பது அறிந்ததே. மழையை முன்கூட்டியே அறியும் வானிலை வசதி இருந்தாலும் வெள்ளப்பெருக்கை முன்கூட்டியே அறியும் வசதி இல்லை. 
 
இந்த நிலையில் நாடு முழுவதும் ஏற்படும் வெள்ளப்பெருக்கை முன்கூட்டியே கணித்து மக்களுக்கு அறிவுறுத்தும் வகையில் Flood watch app  என்ற செயலியை மத்திய நீர்வளத் துறை அறிமுகம் செய்துள்ளது. 
 
முதல் கட்டமாக ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த செயலி, குரல் மூலமாகவும் சில அறிவுறுத்தல்களை கேட்க முடியும் எ என்றும் கூறப்படுகிறது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்