" நான் நாட்டை காக்க உயிர் தியாகம் செய்வேன்" நெஞ்சை உருக்கும் ராணுவ வீரரின் கவிதை!

Webdunia
சனி, 16 பிப்ரவரி 2019 (13:03 IST)
காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் 40 வீரர்கள் வீர மரணம் தழுவிய நிலையில், நெஞ்சை உருக்கி கண்ணீர் வரவைக்கும் ராணுவ வீரர் கவிதை ஒன்று சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.


 
காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் பயங்கரவாதிகள் நடத்திய மனித வெடிகுண்டு‌த் தாக்குதலில்  40 இந்திய வீரர்கள் உயிரி‌ழந்தனர். நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த வீரர்களை எண்ணி நாடே சோகத்தில் முழ்கியுள்ளது  
 
இந்நிலையில் நேற்று முதல் சமூகவலைதளங்களில் இராணுவ வீரர் கவிதை ஒன்று வைரலாகி வருகிறது. அந்த கவிதை:
 
 “நான் போர்களத்தில் மடிந்தால் என்னை சவப்பேட்டியில் அடைத்து வீட்டுக்கு அனுப்புங்கள்.
   என் நெஞ்சுமீது பதக்கங்களை அணிவித்து
   என் தாயிடம் நான் என்னால் முடிந்த அளவிற்கு தேசத்திற்காக சிறப்பாக பணியாற்றினேன் என்று கூறுங்கள்
   என் அப்பாவிடம் சொல்லுங்கள் இனிமேல் என்னால் அவருக்கு தொல்லை இருக்காது என்று
   என் சகோதரனிடம் அவனை நன்றாக படிக்க சொல்லுங்கள்
   என் வண்டியின் சாவி இனி நிரந்தரமாக உனக்குதான் என்றும் கூறுங்கள்
   என் சகோதரியிடம் உன் சகோதரன் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு நீண்ட ஒய்வு எடுத்துகொண்டிருக்கிறான் என்று சொல்லுங்கள்
   என் நாட்டு மக்களிடம்  இறுதியாக அழவேண்டாம் என்று கூறுங்கள் 
   ஏனென்றால் நான் நாட்டிற்காக இறக்க பிறந்த ராணுவ வீரன்.”


 
சமூகவலைதளங்களில் ட்ரெண்டாகி வரும் இந்த கவிதை அனைவரின் மனதையும் உருகவைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்