14வது நாளாக உண்ணாவிரதம் : ஹர்திக் பட்டேல் மருத்துவமனையில் அனுமதி

Webdunia
வெள்ளி, 7 செப்டம்பர் 2018 (18:00 IST)
அகமதாபாத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் தொடா்ந்த பதினான்காவது நாளாக உண்ணாவிரதம இருந்து வரும் ஹா்த்திக் பட்டேயின் உடல் நிலை மோசமடைந்து வருகிறது.

 
அவருக்கு ஆதரவாகவும் மத்திய அரசுக்கு எதிராகவும் பட்டேல் சமூகத்தினா் தொடா்ந்து நெருக்கடி கொடுத்து வந்தனா். குஜராத் மாநிலத்தில் வாழும் தன் இனத்தவருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உரிய இட ஒதுக்கீடு கோரி பட்டிடார் அனாமத் அந்தோலன் சமிதி அமைப்பின் தலைவராக போராடிய போது கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பு  அதாவது 2015ல் பதினைந்துக்கும் மேற்பட்ட நபாகள் பலியாகினா்.
 
அதன் மூன்றாமாண்டு நினைவு தினத்தன்று ஆகஸ்ட் 25ம் தேதி தொடங்கிய இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை கால வரையின்றி தொடரப் போவதாகவும் அவா் தெரிவித்தார்.
 
இந்நிலையில், போராட்டம் தொடங்கி 14 நாட்கள் ஆன நிலையில் அவரது உடல் நிலை மோசமானதால் இன்று அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா்.
 
இதனால் மத்திய அரசும் ஹா்திக் படேல் அமைப்பினருடன் ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்