பரோலில் வருகிறார் பிரபல சூப்பர் ஹீரோ சாமியார்

Webdunia
திங்கள், 24 ஜூன் 2019 (18:50 IST)
கற்பழிப்பு மற்றும் கொலை வழக்குக்காக இரண்டு வருடங்கள் முன்பு சிறையில் அடைக்கப்பட்ட சாமியார் ராம் ரஹீம் சிங் பரோலில் வெளிவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தெரா சாச்சா சௌதா என்ற மத அமைப்பின் தலைவர் செயிண்ட் குருமீத் ராம் ரஹீம் சிங் ஜீ இன்சான். இரண்டு கிலோமீட்டர் தூரத்துக்கு பெயர் வைத்திருக்கும் இவருக்கு இந்தியா முழுவதும் பல கோடீஸ்வரர்கள் முதல் சாதாரண மனிதர்கள் வரை பக்தர்கள் இருக்கிறார்கள். இவர் நடித்து வெளியான “எம்.எஸ்.ஜி”, “எம்.எஸ்.ஜி- 2” இரண்டும் ஓடவே இல்லை என்றாலும் இவரது பக்தர்களுக்கு சிடி போட்டு விற்பனை செய்ததிலேயே பாக்ஸ் ஆபீஸ் வசூல் கண்டது.

கடந்த 2017ம் ஆண்டு இவர் இரண்டு பெண்களை கற்பழித்தது மற்றும் ஒரு பத்திரிக்கையாளர்களை கொன்றது உள்ளிட்ட குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டார். ஹரியானாவின் சிர்சா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள இவரை நல் ஒழுக்கத்தின் அடிப்படையில் பரோலில் விடுதலை செய்வதாக காவல் துறை அறிவித்துள்ளது.

இவர் வரவை கொண்டாட இப்போதே இவரது ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். இவரது சிறை வாழ்க்கையை மையமாக கொண்டு இவரே நடிக்கும் அடுத்தப்படம் கூட வெளிவரலாம் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்