போலீஸாருக்கு ஆப்பு வைத்த முதல்வர்! ஒழுங்காக வேலை செய்யலீனா இதுதான் கதி ...

Webdunia
திங்கள், 24 ஜூன் 2019 (18:24 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் பணிகளத்தில் ஒழுக்காக வேலை கடமையாற்றி சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க தவறும் போலீஸாரை கட்டாயமாக பணி ஓய்வு கொடுத்து வீட்டுக்கு அனுப்பும் திட்டத்தை அம்மாநில அரசு நிறைவேற்ற உள்ளதாக தகவல் வெளியாகிறது.
உத்தரபிரதேசம் மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்துவருகிறது. இந்நிலையில் அம்மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட தவறும் போலீஸாருக்கு கட்டாய விடுப்பு தருக் திட்டத்தை செயல்படுத்த முதல்வர் ஆதித்யநாத்  ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகிறது.
 
தற்போது அம்மாநில் போலீஸார் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுகின்றனரா என்பதை அறியவும்  முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
 
மேலும் கடந்த  மார்ச் 31 ஆம் தேதிவரை 50 வயது முடிந்த டிஜி, ஐஜி, டிஐஜி, எஸ்பி மற்றும் இதர பொறுப்பில் உள்ள அதிகாரிகளில் சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்காதவர்கள் பட்டியலை கூடிய சீக்கிரம் அதாவது இம்மாத இறுதிக்குள் சமர்பிக்க வேண்டும் எனவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதற்கான சுற்றறிக்கை வரும் 21 ஆம் தேதி காவல்துறை உயர்மட்ட அதிகாரிகளுக்கு அனுப்பட்டுள்ளது.மேலும் தற்போது 56 வயதைக் கடந்த போலீஸாருக்கு பணி ஓய்வினை வழங்க 56 வது விதியின்படி அரசுக்கு அதிகாரம் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்