தமிழகத்திற்கு செல்லும் மைசூர்பாக்கை தடுத்து சாப்பிடுவோம்: வாட்டாள் நாகராஜ் ஆவேசம்

Webdunia
செவ்வாய், 17 செப்டம்பர் 2019 (07:47 IST)
தமிழகத்தின் பாரம்பரிய பொருட்களுக்கு கடந்த சில வாரங்களாக புவிசார் குறியீடு கிடைத்து வரும் நிலையில் மைசூர்பாகுவிற்கான புவிசார் குறியீடு தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக டுவிட்டரில் வதந்தி ஒன்று பரவியது. இதனால் கொதித்தெழும்பிய கன்னட அமைப்பு ஒன்றின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தமிழகத்திற்கு மைசூர்பாக்கை கொண்டு செல்ல முடியாத வகையில் தடுப்போம் என்றும், அப்படி மீறி கொண்டு செல்லப்பட்டால் மாநில எல்லையில் மைசூர்பாக்கை தடுத்து நாங்களே சாப்பிட்டு விடுவோம் என்றும் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 
கர்நாடகத்தில் குறிப்பாக மைசூரில் தயாராகும் மைசூர்பாக், உலகம் முழுவதும் புகழ்பெற்றது. இந்த மைசூர்பாகுவிற்காக புவிசார் குறியீடு தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக ஒரு டுவிட்டர் பயனாளி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதுமட்டுமின்றி இந்த புவிசார் குறியீடு கிடைக்க காரணமாக இருந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு நன்றி என்றும் குறிப்பிட்டு அவருக்கு மைசூர்பாகை கொடுப்பது போன்ற ஒரு புகைப்படத்தையும் வெளீயிட்டுள்ளார்.
 
 
இந்த டுவீட்டில் இருக்கும் தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பதை கூட விசாரிக்காமல் மைசூருக்கு சொந்தமான இனிப்பு பண்டத்தை தமிழகத்திற்கு தாரை வார்ப்பதா என ஆவேசமாக எதிர்ப்பு தெரிவித்த வாட்டாள் நாகராஜ், ‘காவிரி, மேகதாதுவில் அமைதி காத்தது போல், மைசூர் பாகு விஷயத்தில் அமைதியாக இருக்க மாட்டோம் என அவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
 
 
அதன்பின்னர் இந்த தகவல் வதந்தி என்று அவரிடம் எடுத்து கூறியபின்னரே வாட்டாள் நாகராஜ் அமைதியானார். இந்த நிலையில் இந்த வதந்தியை பரப்பிய டுவிட்டர் பயனாளி மீது வழக்குப்பதிவு செய்யபப்ட்டு அவரை பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்