1 லட்ச ரூபாய் பில்லா? நீங்க கரண்ட் பில் கட்டாம இருந்துட்டு..!? - கங்கனாவை வறுத்தெடுத்த மின்வாரியம்!

Prasanth Karthick

வெள்ளி, 11 ஏப்ரல் 2025 (08:44 IST)

பாஜக எம்.பி கங்கனா ரனாவத் தனது வீட்டில் யாரும் இல்லாதபோதே ஒரு மாதத்திற்கு 1 லட்ச ரூபாய் கரண்ட் பில் போடப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய நிலையில் மின்வாரியம் அதற்கு விளக்கம் அளித்துள்ளது.

 

இமாச்சல பிரதேசத்தை பூர்வீகமகா கொண்ட பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத். சமீபத்தில் பாஜக சார்பில் மாண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அவர், தொடர்ந்து இமாச்சல பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியை விமர்சித்து வருகிறார்.

 

அவ்வாறாக சமீபத்தில் மாண்டியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசியவர், இமாச்சல காங்கிரஸ் அரசு, யாருமே வசிக்காத தன் வீட்டிற்கு மாதம் ரூ.1 லட்சம் பில் போடுவதாகவும், அங்கு தான் தங்கவே இல்லையென்றும் குற்றம் சாட்டி பேசியிருந்தார்.

 

இந்நிலையில் கங்கனாவின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள இமாச்சல பிரதேச மின்வாரியம், ஜனவரி மாதம் முதலே கங்கனா தனது வீட்டு கரண்ட் பில்லை கட்டவில்லை என்றும், அவரது வீட்டின் மின்சுமை 94.82 கிலோவாட், அதாவது ஒரு சாதாரண வீட்டின் மின் தேவையை விட 1,500 மடங்கு அதிகம் என்றும் கூறியுள்ளது.

 

தோராயமாக கங்கனாவின் வீட்டிற்கு ரூ.32,287 வரை நிலுவைத் தொகை உள்ளதாகவும், மார்ச் மாதத்தில் மட்டும் அவர் வீட்டு மின்கட்டணம் ரூ.55 ஆயிரம் எனவும் தெரிவித்துள்ள மின்வாரியம், கங்கனா இதையெல்லாம் மறைத்து ஆளே இல்லாத வீட்டிற்கு ரூ.1 லட்சம் கட்டணம் என்று பிரச்சினையை எழுப்பியுள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்