UPI செயலியில் பண பரிவர்த்தனை: இன்று முதல் புதிய வசதி அறிமுகம்..!

Siva
திங்கள், 16 செப்டம்பர் 2024 (13:46 IST)
யுபிஐ செயலிகளுக்கான தினசரி பண பரிவர்த்தனை உச்சவரம்பு தற்போது 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் யுபிஐ மூலமாக பண பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெரும்பாலான மக்கள் செல்போன் மூலம் ஆன்லைன் பரிவர்த்தனைகளை எளிமையாக செய்கின்றனர். சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் யுபிஐ பரிவர்த்தனைகளின் மதிப்பு குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, யுபிஐ செயலியில் பல்வேறு புதிய அப்டேட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில், யுபிஐ மூலம் தற்போது 5 லட்சம் ரூபாய் வரை பணம் அனுப்பும் வசதி அறிமுகமாகியுள்ளது. இந்த வசதி நாடு முழுவதும் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

எனினும், இந்த உச்சவரம்பு குறிப்பிட்ட சில பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே பொருந்தும். அதாவது மருத்துவ செலவுகள், கல்விச்செலவுகள் போன்ற நோக்கங்களுக்காக யுபிஐ மூலமாக 5 லட்சம் வரை பணத்தை பரிமாற்றம் செய்ய முடியும். இதற்கு முன்பு யுபிஐ பரிமாற்ற உச்சவரம்பு 1 லட்சம் ரூபாய் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்