டிசம்பர் 31க்குப் பிறகு Google Pay, PhonePe, Paytm மூலம் கட்டணம் செலுத்த முடியாதா?

ஞாயிறு, 17 டிசம்பர் 2023 (11:05 IST)
ஆன்லைன் மூலம் பரிவர்த்தனை செய்யப்படும் பணத்தின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மத்திய அரசு சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதன்படி டிசம்பர் 31ஆம் தேதிக்கு பிறகு  மோசடியை தடுப்பதற்காக யுபிஐ மூலம் பணம் செலுத்தினால் சம்பந்தப்பட்ட நபருக்கு அழைப்பு அல்லது எஸ்எம்எஸ் மூலம் எச்சரிக்கையை அனுப்பப்படும் என்றும் அந்த பரிவர்த்தனையை சரி பார்க்கும்படி கேட்கப்படும் என்றும் சம்பந்தப்பட்ட நபர் சரிபார்த்தால் மட்டுமே வங்கி கணக்கில் இருந்து பணம் கழிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
யுபிஐ மூலம் பணம் அனுப்புவதில் ஏராளமான மோசடிகள் நடைபெற்று வருவதாக புகார் அளிக்கப்பட்டது. இதனை அடுத்து வாடிக்கையாளர்களை சரிப்பார்க்கும் இந்த வசதி ஜனவரி ஒன்றாம் தேதி முதல் நடைபெற உள்ளது. 
 
எனவே ஒவ்வொரு வாடிக்கையாளரும் தங்கள் கணக்கில் கேஒய்சி செய்ய வேண்டும் என்றும் வங்கி கணக்கில் பணம் கழிப்பதற்கு முன்னர் மொபைல் எண் சரிபார்க்கப்பட்டு அந்த மொபைல் எண்ணுக்கு  எஸ்.எம்.எஸ். அனுப்பப்படும் என்றும் வாடிக்கையாளர் சரிபார்த்த பின்னரே பணம் வங்கி அக்கவுண்டில் இருந்து கழிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்