ஜிஎஸ்டி வரிவிதிப்பில் மாற்றம்: புத்தாண்டு முதல் உயரும் பொருட்களின் விலை!

Webdunia
வியாழன், 30 டிசம்பர் 2021 (07:28 IST)
ஜிஎஸ்டி வரி விதிப்பில் ஒரு சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதால் புத்தாண்டு முதல் ஒரு சில பொருட்களின் விலை உயரும் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
ஆயத்த ஆடைகள் காலணிகள் போர்வைகள் உள்ளிட்ட ஒரு சில பொருட்களின் மீதான மத்திய அரசின் நேரடி வரிகள் விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணத்தினால் சில்லரை வர்த்தகத்தில் புத்தாண்டு முதல் இந்த பொருட்களின் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது
 
மேலும் ஆயிரம் ரூபாய்க்கு மேல் விலையுள்ள பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை 5 சதவிகிதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் புத்தாண்டு முதல் பல பொருட்களின் விலை உயரும். 
 
அதே போல் ஓலா, ஊபர் போன்ற செயலிகளில் ஆட்டோ புக்கிங் செய்தால் 5 சதவீத வரி வசூலிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக ஓலா, ஊபர் போன்ற ஆட்டோக்களில் பயணம் செய்யும் பயணக் கட்டணம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது எனவே புத்தாண்டு முதல் ஒருசில வரி விதிப்பு அதிகரிக்கும் என்று கூறப்படுவதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்