நகைக்கடன் தள்ளுபடிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு: அமைச்சர் பெரியசாமி தகவல்

Webdunia
வியாழன், 30 டிசம்பர் 2021 (07:23 IST)
13.47 லட்சம் நகை கடன்களே தள்ளுபடி தகுதியானவை என அமைச்சரவை பெரியசாமி அவர்கள் தெரிவித்திருந்தாலும் நகை கடன் தள்ளுபடிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்க இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார் 
 
48.84 லட்சம் நகை கடன்களில் 7.65 நகைக்கடைகள் 40 கிராமுக்கு மேல் கடன் பெற்றவை என்றும் 21.63 லட்சம் கடன்கள் ஒரே குடும்ப அட்டையில் உள்ளவர்கள் 40 கிராமுக்கு மேல் பெற்றுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்
 
மீதமுள்ள 2.2 லட்சம் கடன்கள் முறைகேடாக பெறப்பட்டுள்ளன என்றும் 15.2 லட்சம் கடன்களில் விதி மீறல்கள் நடந்துள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனவே 13.47 லட்சம் நகை கடன்களே தள்ளுபடிக்கு தகுதியானவை என தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார் 
 
இருப்பினும் குடும்ப அட்டை, ஆதார் விவரங்களை சரியாக சமர்ப்பிக்காதவர்கள் அதனை சரியாக சமர்ப்பித்தால் அதனை ஆய்வு செய்து நகை கடன் தள்ளுபடிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்படும் என்று அமைச்சர் ஐ பெரியசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்