தீபாவளி வரை மக்களுக்கு இலவச ரேசன் - பிரதமர் மோடி

Webdunia
திங்கள், 7 ஜூன் 2021 (19:02 IST)
இந்தியாவில் கொரொனா இரண்டாம் அலை வேகமாகப் பரவிவரும் நிலையில், அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இத்தொற்றைக் குறைக்க மாநில அரசுகள் மத்திய அரசுடன் இணைந்து பணியாற்றி வருகின்றன.

இந்நிலையில், இன்று மாலை 5 மணிக்கு பாரத பிரதமர் மோடி,  நாட்டு மக்களுக்கு  காணொளி வாயிலாக உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது: மாநிலங்களின் கோரிக்கையை ஏற்று வரும் ஜூன் 21 ஆம் தேதி முதல் அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.

அதேபோல் இந்தக் கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் வாழ்வாதாரம் இழந்து மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் நிலை அறிந்து பிரதமர் மோடி வரும், தீபாவளி வரை வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள மக்களுக்கு ரேசனில் இலவச உணவு தானியங்கள் வழங்கப்படும் இதன் மூலம் நாடு முழுக்க உள்ள 80 கோடி மக்கள் பயனடைவார்கள் எனத் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்