கொரோனாவுக்கு எதிரான ஒரே கேடயம் தடுப்பூசி- பிரதமர் மோடி

திங்கள், 7 ஜூன் 2021 (17:22 IST)
பாரத பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தற்போது உரையாற்றி வருகிறார்.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. சமீப நாட்களாக இந்திய அளவில் தினசரி கொரோனா பாதிப்பு மெல்ல குறைந்து 1 லட்சமாக உள்ளது. இந்நிலையில் கரும்பூஞ்சை தொற்று பாதிப்பும் இந்தியாவில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதைத்தடுப்பதற்கான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும், தடுப்பு மருந்துகளையும் மாநில அரசு மத்திய அரசுடன் இணைந்து செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில் இன்று மாலை 5 மணி முதல்  நாட்டு மக்களுக்கு  பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.

அவர் கூறியுள்ளதாவது:

கொரோனா இரண்டாவது அலையால் நமது அன்புக்குரியவர்கள் பலரையும் இழந்துவிட்டோம்… கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிக மோசமான நோய்த் தொற்று உலகிலுள்ள மக்களை பாதித்துள்ளது. எனவே நாட்டு மக்கள் அனைவரும் இத்தொற்றிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளவே, முகக கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், போன்றவற்றைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், கொரொனா  முதல் அலை முடிந்து தற்போது கொரொனா இரண்டாம் அலை பரவிவருகிறது. இதான் நமது பெரிய எதிராகவுள்ளது. கடந்த ஏப்ரல் மே மாதங்களில் ஆக்சிஜனுக்கு பெருமளவு தேவை ஏற்பட்டது. நாட்டின் சுகாதாரக் கட்டமைப்புகளை மேம்படுத்தவுள்ளோம். தற்போது நாடு நெருக்கடியைச் சந்தித்துவரும் நிலையில் கொரோனாவுக்கு எதிரான ஒரே கேடயம் தடுப்பூசி எனத் தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்