பெண் எஸ்.ஐ.க்கு கொலை மிரட்டல் விடுத்த சென்னை ஆட்டோ ஓட்டுநர் கைது!

Webdunia
திங்கள், 7 ஜூன் 2021 (18:56 IST)
பெண் எஸ்.ஐ.க்கு கொலை மிரட்டல் விடுத்த சென்னை ஆட்டோ ஓட்டுநர் கைது!
சென்னையில் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் பெண் எஸ்ஐ ஒருவரை மிரட்டிய வீடியோ இணையதளங்களில் வைரலான நிலையில் சற்று முன் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் 
 
சென்னையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் அக்பர் அலி என்பவர் போலி இபாஸ் எடுத்து ஆட்டோ ஓட்டியதாக தெரிகிறது. இதனை அடுத்து அவரை மடக்கிப் பிடித்த கிருத்திகா என்ற எஸ்ஐ ஆட்டோவை பறிமுதல் செய்தார் இதனால் ஆத்திரமடைந்த அக்பர் அலி பெண் எஸ்ஐ கிருத்திகாவை தகாத வார்த்தைகளில் பேசியதோடு சாபம் விட்டதாகவும் தெரிகிறது
 
இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலான நிலையில் தற்போது ஆட்டோ ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆட்டோ ஓட்டுனர் பெண் எஸ்ஐ கிருத்திகாவை ஒருமையில் பேசியதோடு தகாத வார்த்தைகளும் பேசிய வீடியோவால் ஆட்டோ ஓட்டுனர் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்