இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு மற்றும் ஸ்புட்னிக் தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறையும் இருந்து வருகிறது.
இந்நிலையில் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களில் சில மாநிலங்கள் பிரதமர் மோடியின் படத்தை நீக்கி வருகிறது. முன்னதாக பஞ்சாப், ராஜஸ்தான் மாநில அரசுகள் பிரதமர் மோடியின் புகைப்படத்தை நீக்கிய நிலையில் தற்போது மேற்கு வங்க அரசும் பிரதமர் மோடியின் புகைப்படத்தை நீக்கியுள்ளது.