மத்திய முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெல்டி உடல் நலக்குறைவால் காலமானார்.
முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி, மூச்சு திணறல் காரணமாக கடந்த 9ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நாளுக்கு நாள் அவரது உடல்நிலை மோசமாகிக்கொண்டே போனது.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அருண் ஜெட்லி இன்று காலமானார். இன்று மதியம் 12.07 மணிக்கு அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனை தகவல் வெளியிட்டுள்ளது.
அவரது மரணம் பாககவிற்கு பெரிய இழப்பாக பார்க்கப்படும் நிலையில் கட்சிக்கு அப்பார்பட்டு தலைவர்கள் பலர் அருண் ஜெட்லி மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.