எக்மோ கருவி பொருத்தம்: சீரியஸ் கண்டிஷனில் அருண் ஜெட்லி

சனி, 17 ஆகஸ்ட் 2019 (16:37 IST)
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அருண் ஜெட்லியின் உடல்நலம் மேலும் மோசமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
பாஜகவின் முக்கிய உறுப்பினராகவும், நிதியமைச்சராகவும் சிறப்பாக செயல்பட்டவர் அருண் ஜெட்லி. கடந்த 9 ஆம் தேதி மூச்சு திணறல் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவனமையில் அனுமதிக்கப்பட்டார்.  
 
அவரது உடல்நிலை மோசமான நிலையில் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால், இப்போது வரை அருண் ஜெட்லியின் உடல்நலன் குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை எந்தவொரு அறிக்கையையும் வெளியிடவில்லை. 
 
இந்நிலையில் அவரது உடல்நலம் மேலும் மொசமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அவருக்கு உயிர்காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. அருண் ஜெட்லி சுவாசிக்க எக்மோ கருவி பொருத்தப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.  
 
அருண் ஜெட்லியின் உடல்நல்ம் நாளுக்கு நாள் மோசமாவதால் நேற்று பிற்பகல் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சந்தித்தா. இதனை தொடர்ந்து நேற்று நள்ளிரவு 11.15 மணியளவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத் ஆகியோர் சந்தித்தனர்.  
 
இதற்கு முன்னரே மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் மற்றும் இணை அமைச்சர் அஸ்வினி சவுபே ஆகியோர் மருத்துவமனை சென்று வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்