சாராயம் வாங்கி குடிக்க குழந்தையை ரூ.2.5 லட்சத்துக்கு விற்பனை செய்த தந்தை; அதிர்ச்சி சம்பவம்!

Siva
திங்கள், 8 ஜனவரி 2024 (08:07 IST)
சாராயம் வாங்கி குடிக்க ரூ.2.5 லட்சத்திற்கு பெற்ற குழந்தையை விற்ற தந்தை குறித்த அதிர்ச்சி சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் நடந்துள்ளது.  
 
மகாராஷ்டிரா மாநில த்தில் உள்ள தாதர் ராவ் என்பவர் தற்போது தனது மனைவி குழந்தையுடன் தெலுங்கானா மாநிலத்தில் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் அவர் மதுவுக்கு அடிமையான நிலையில் சாராயம் வாங்க பணமில்லாமல் திண்டாடி உள்ளார் 
 
இதனை அடுத்து தனது மூன்று வயது மகனை அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் 2.5 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்து உள்ளார். இந்த நிலையில் வீட்டில் மகனை காணாது தேடிப் பார்த்த அவரது மனைவி அதிர்ச்சி அடைந்து குழந்தை எங்கே என்று கேட்டபோது அவர் குழந்தையை விற்று விட்டேன் என்று கூறியுள்ளார்.
 
இதனை அடுத்து அவரது மனைவி போலீசில் புகார் செய்ய போலீசார் விரைந்து குழந்தையை பத்திரமாக மீட்டனர். மேலும் குழந்தையை விற்பனை செய்த தந்தை மற்றும் குழந்தையை வாங்கிய நபர் என இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 
சாராயம் குடிப்பதற்காக 2.5 லட்சம் ரூபாய்க்கு பெற்ற குழந்தையை பெற்ற தந்தை குறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்