கணவருக்கு பதில் குழந்தையை வாரிசாக நியமனம் செய்யலாம்: ஓய்வூதிய விதியில் திருத்தம்..!

புதன், 3 ஜனவரி 2024 (11:55 IST)
புதிதாக திருத்தப்பட்டுள்ள ஓய்வூதிய விதிகளின்படி இனி பெண் அரசு ஊழியர்கள் கணவருக்கு பதிலாக குழந்தைகளை வாரிசாக நியமனம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  
 
பெண் அரசு ஊழியர்கள் திருமண உறவில் நெருக்கடியை எதிர்கொள்ளும் போது தங்கள் கணவருக்கு பதிலாக குழந்தைகளை ஓய்வூதியத்துக்கு வாரிசாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை விடப்பட்டது. 
 
விவாகரத்து, குடும்ப வன்முறை, வரதட்சணை கொடுமை உள்ளிட்ட பிரச்சனைகளை பெண்கள் சந்தித்து வரும் நிலையில் அரசு ஊழியராக இருந்து ஓய்வூதியம் பெறும்  பெண்கள் தங்கள் மறைவிற்கு பிறகு ஓய்வு ஊதியத்தை கணவருக்கு பதிலாக குழந்தைகளுக்கு செல்ல வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

ALSO READ: தொடர் சரிவில் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்களை அச்சப்படுத்தும் சென்செக்ஸ்..!
 
 இதற்காக ஓய்வூதிய விதிகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த திருத்தத்தின்படி பெண் அரசு ஊழியர் இறந்துவிட்டால் அவருடைய ஓய்வூதிய தொகை அவரது குழந்தைகளுக்கு செல்லும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.  இந்த ஓய்வூதிய திருத்தத்திற்கு பலர் தங்களது வரவேற்பை தெரிவித்துள்ளனர்
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்