அடுத்த கட்டத்திற்கு செல்கிறது விவசாயிகள் போராட்டம்: இன்று ரயில் மறியல்!

Webdunia
வியாழன், 18 பிப்ரவரி 2021 (06:52 IST)
மத்திய அரசின் புதிய வேளாண்மை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் ஹரியானா உள்பட ஒரு சில வட மாநில விவசாயிகள் டெல்லியில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கடுமையாக போராடி வருகின்றனர்
 
இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு பத்துக்கும் மேற்பட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும் எந்த வித உடன்பாடும் ஏற்படாததால் போராட்டம் தொடர்ந்து வருகிறது 
 
இந்த நிலையில் விவசாயிகள் போராட்டம் குறித்து தலைப்புச் செய்திகளில் செய்திகளை போட்டுக்கொண்டிருந்த ஊடகங்களும் தற்போது அந்த செய்தியை மறந்துவிட்டன. இதனை அடுத்து விவசாயிகள் தற்போது தங்களது போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்துள்ளனர் 
 
இதனையடுத்து இன்று ரயில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி நாடு முழுவதும் இன்று விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பஞ்சாப் அரியானா உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள ரயில் நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்