உத்தரபிரதேச மாநில சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் விவசாயிகள் பாஜகவுக்கு எதிரக களமிறங்க உள்ளதாக தகவல் வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
விவசாயிகள் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பதும் கடந்த 6 மாதங்களாக நடைபெற்று வரும் இந்த போராட்டம் முடிவுக்கு வராமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜகவுக்கு எதிராக விவசாயிகள் பிரச்சாரம் செய்ய முடிவு செய்திருப்பதாக அறிவித்துள்ளனர்
குறிப்பாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அந்த ஆட்சியை வீழ்த்தியே தீருவோம் என விவசாயிகள் சங்கம் சூளுரைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விவசாயிகளின் போராட்டம் காரணமாக பாஜகவின் வெற்றி பாதிக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்