ஒன்றரை ஆண்டுகளாக சம்பள பாக்கி… லதா ரஜினிகாந்த் பள்ளி ஊழியர்கள் போராட்டம்!
வியாழன், 2 செப்டம்பர் 2021 (16:25 IST)
நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் ஒரு பள்ளியை நடத்தி வருகிறார்.
நடிகர் ரஜினிகாந்தின் மனைவில் லதா சென்னையில் கிண்டியில் உள்ள வணிக கட்டிடத்தில் ஸ்ரீராகவேந்திரா கல்வி நிறுவனம் பெயரில் ஆஸ்ரமம் ஒன்றை நடத்தி வந்தார். இந்நிலையில் பல மாதங்களாக லதா ரஜினிகாந்த் வாடகை பாக்கி தரவில்லை என்ற புகார் கடந்த சில ஆண்டுகளாக உள்ளது.
இந்நிலையில் அப்பள்ளியின் ஆசிரியர்கள் ஒன்றரை ஆண்டுகளாக சம்பளம் தரவில்லை என சொல்லி பள்ளிக்கு வெளியே போராட்டம் நடத்தியுள்ளனர். கொரோனா பரவல் தொடங்கியதில் இருந்தே எங்களுக்கு சம்பளம் தரவில்லை எனக் குற்றச்சாட்டை வைத்துள்ளனர்.