தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளமாக சச்சின் நியமனம்!

Webdunia
செவ்வாய், 22 ஆகஸ்ட் 2023 (15:59 IST)
ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கள் இந்திய தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, மேகாலயாம் சத்தீஸ்கர்  ஆகிய  5 மாநிலங்களில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல்  நடக்கவுள்ளது.

இதற்காக, அரசியல் கட்சிகள் தங்களின் வேட்பாளர்கள் தேர்வு, பிரசாரம், கூட்டணி ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இந்த  நிலையில், ஐந்து மாநில சட்டசபைத் தேர்தலையொட்டி, தேர்தல் ஆணையத்தில் பிரசாரங்களை மேற்கொள்ள,  தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளமாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் நியமிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகிறது.

மேலும், டெல்லியில், உள்ள ரங்பவன் ஆடிட்டோரியத்தில் சச்சினை தேசிய அடையாளமாக அங்கீகரிக்கும் வகையில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்