இந்தியர்கள் கடத்தப்பட்ட அடுத்த நாளே, அவர்களை "பாதுகாப்பாகவும், விரைவாகவும்" விடுவிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்க வேண்டும் என்று மாலி அரசுக்கு இந்தியா வலியுறுத்தியது.
மாலியில் உள்ள டைமண்ட் சிமென்ட் தொழிற்சாலையில் பணிபுரிந்த இந்தியர்களை ஆயுதமேந்திய கும்பல் ஒன்று வலுக்கட்டாயமாக பணயக்கைதிகளாக பிடித்து கடத்தி சென்றது. அல்-கொய்தாவுடன் தொடர்புடைய ஜமாத் நுஸ்ரத் அல்-இஸ்லாம் வல்-முஸ்லிமின் என்ற அமைப்பு, இந்த கடத்தலுக்கு பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படுகிறது.
கடத்தப்பட்ட இந்தியர்களை பாதுகாப்பாகவும் விரைவாகவும் விடுவிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று மாலி குடியரசின் அரசை நாங்கள் வலியுறுத்துகிறோம்," என்று வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், மாலியில் வசிக்கும் அனைத்து இந்தியர்களும் தீவிர எச்சரிக்கையுடன் இருக்குமாறும், விழிப்புடன் இருக்குமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.