இது வடமாநிலம் அல்ல, தமிழ்நாட்டில் தான்.. இப்படி ஒரு சாலை போட்ட புத்திசாலி ஒப்பந்ததாரர் யார்?

Siva

வியாழன், 3 ஜூலை 2025 (08:13 IST)
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் நகராட்சியின் முதல் வார்டில் புதிதாக அமைக்கப்பட்ட ஒரு சாலையில், மின் கம்பம் சாலையின் நடுவிலேயே விடப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். இந்த சாலையை இருசக்கர வாகனங்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.
 
நேற்று முன்தினம் நடைபெற்ற புதிய சாலை அமைக்கும் பணியில், சாலையின் நடுவில் இருந்த மின் கம்பத்தை அகற்றிவிட்டு சாலையை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், ஒப்பந்ததாரர்கள் மின் கம்பத்தை அகற்றாமல், அதை அப்படியே நடுவில் விட்டுவிட்டு சாலையை அமைத்துவிட்டனர்.
 
இதனால், அந்த சாலையில் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்கள் மட்டுமே சிரமப்பட்டு செல்ல முடிகிறது. சாலை அமைத்த ஒப்பந்ததாரர்கள் சிறிதும் யோசிக்காமல் இப்படி செய்ததற்கு அப்பகுதி மக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
 
மின் கம்பத்தை மாற்றி, நான்கு சக்கர வாகனங்களும் செல்லும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகராட்சி மற்றும் மின்வாரியத் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தக் கோரிக்கை ஏற்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்