வட மாநிலங்களில் காவடி எடுத்து சிவன் கோயில்களுக்கு பாதயாத்திரை சென்று கொண்டிருக்கும் நிலையில் சில சர்ச்சைக்குரிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, புனித யாத்திரை செல்லும் சாலைகளில் இந்து அல்லாதவர்கள் கடைகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், கடைகளின் உரிமையாளர் பெயர் மற்றும் கைப்பேசி எண்ணை கடைக்கு வெளியே எழுதி வைக்க வேண்டும் என்றும், யாத்திரை செல்லும் பாதைகளில் இறைச்சி கடைகள் இருக்கக் கூடாது என்றும் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர், டெல்லி - டேராடூன் நெடுஞ்சாலையில் உள்ள பண்டிட் வைஷ்னோவ் தாபா என்ற உணவகத்தில், யோகா சாதனா ஆசிரமத்தை சேர்ந்த சீடர்கள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது ஆதார் அட்டையின்படி ஒரு கடையின் உரிமையாளர் முஸ்லிம் என்று தெரியவந்ததும், அந்த சீடர்கள் ஊழியர்களின் ஆடைகளை கழற்றி பார்த்துள்ளனர். இதையடுத்து, யஷ்வீர் மஹராஜின் ஆறு சீடர்களிடம் விளக்கம் கேட்டு முசாபர்நகர் புதுமண்டி போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.