மம்தா பிடிவாதத்தால் பாஜக கூட்டணிக்கு அடித்த லக்.. காங்கிரஸ் சோகம்..!

Siva
வெள்ளி, 15 மார்ச் 2024 (07:30 IST)
மேற்குவங்க மாநிலத்தில் மம்தா பிடிவாதம் காரணமாக இந்தியா கூட்டணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக சமீபத்தில் வெளியான கருத்து கணிப்பு தெரிவித்தது.

கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான கருத்துக் கணிப்பில் இந்தியா கூட்டணி மற்றும் பாஜக கூட்டணி ஆகிய இரண்டிற்கும் சம அளவில் வெற்றி வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்காமல் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

மம்தா பானர்ஜியின் இந்த பிடிவாதம் காரணமாக காங்கிரஸ் மற்றும்  திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் பெரும் வாக்கு சரிவு ஏற்பட்டிருப்பதாகவும் வாக்காளர்கள் இந்தியா கூட்டணி மீது அதிருப்தியில் இருப்பதாகவும் நேற்று வந்த கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் உள்ள மொத்தமுள்ள 42 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணிக்கு ஒரு தொகுதி கூட கிடைக்காது என்றும் பாரதிய ஜனதா கூட்டணிக்கு 25 தொகுதிகளும் மம்தா கட்சிக்கு 17 தொகுதிகளும் கிடைக்கும் என்று கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜக 18 தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 22 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற நிலையில் இந்தியா கூட்டணியை மதிக்காமல் தன்னிச்சையாக மம்தா முடிவெடுத்ததால் அந்த கூட்டணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக கருத்துக்கணிப்பின் மூலம் தெரிய வந்துள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்