டபுள் டக்கர் பேருந்தின் கடைசி நாள்: சோகத்துடன் வழியனுப்பி வைத்த பயணிகள்..!

Webdunia
சனி, 16 செப்டம்பர் 2023 (11:59 IST)
மும்பையில் கடந்த பல வருடங்களாக இயங்கிக் கொண்டிருந்த டபுள் டக்கர் பேருந்து நேற்றுடன் தனது சேவையை முடித்துக் கொண்ட நிலையில் பயணிகள் சோகத்துடன் அந்த பேருந்துகளை வழி அனுப்பி வைத்தனர்  
 
மும்பையின் அடையாளமாக திகழ்ந்தவைகளில் ஒன்று டபுள் டக்கர் பேருந்து என்பதும் டபுள் டக்கர் பேருந்தில் பயணம் செய்வதில் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் மும்பை அந்தேரியில் நீண்ட காலமாக இயங்கிக் கொண்டிருந்த டபுள் டக்கர் பேருந்து தனது சேவையை நேற்றுடன் முடித்துக் கொண்டது. 
 
பேருந்தின் கடைசி நாளான நேற்று பேருந்து ஓட்டுநர்கள் நடத்துனர்கள் பொதுமக்கள் பயணிகள் என அனைவரும் திரண்டு வந்து அந்த பேருந்துகளை சோகத்துடன் வழிஅனுப்பி வைத்தார்கள்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்