தோனி அடித்த அந்த பிரபல சிக்ஸ்… உலகக் கோப்பையை முன்னிட்டு ஏலம் விடப்படும் நாற்காலிகள்!
வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (07:17 IST)
இந்திய கிரிக்கெட் அணி முதல் முதலாக 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை கபில்தேவ் தலைமையில் வென்றது. ஆனால் அதன் பிறகு 28 ஆண்டுகள் கழித்தே தோனி தலைமையிலான இந்திய அணி கோப்பையை வெல்ல முடிந்தது.
2011 ஆம் ஆண்டு மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் இந்திய அணி இலங்கையை எதிர்த்து விளையாடி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் வின்னிங் ஷாட்டை சிக்ஸ் அடித்து கூஸ்பம்ப் மொமண்ட்டை கொடுத்தார் தோனி.
தோனியின் அந்த பிரபல சிக்ஸ் விழுந்த இரண்டு சேர்களை இப்போது உலகக் கோப்பையை முன்னிட்டு ஏலம் விட மும்பை கிரிக்கெட் அசோஷிசேஷன் முடிவு செய்துள்ளது.