இனி பேருந்து, லாரிகளில் செல்பவர்களுக்கும் சீட் பெல்ட் கட்டாயம்: அதிரடி உத்தரவு..!

ஞாயிறு, 10 செப்டம்பர் 2023 (10:59 IST)
தற்போது கார்களில் செல்பவர்களுக்கு மட்டும் சீட் பெல்ட் கட்டாயம் என்று கூறப்பட்டுள்ள நிலையில் இனி பேருந்து மற்றும் லாரிகளில் செல்பவர்களுக்கும் சீட் பெல்ட் கட்டாயம் என கேரளா அரசு தெரிவித்துள்ளது. 
 
முதல் கட்டமாக கேரளாவில் வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் பேருந்து டிரைவர்களுக்கு சீட் பெல்ட் கட்டாயம் என்று நடவடிக்கை அமல்படுத்த உள்ளது 
 
இதனை அடுத்து சில மாதங்களில் பயணிகளுக்கும் சீட் பெல் கட்டாயம் என்று அமல்படுத்தப்படும் என்று தெரிகிறது 
 
அதேபோல் லாரி டிரைவர்கள் உட்பட கனரக வாகனங்களில் செல்லும் அனைவரும் சீட் பட்டு கட்டாயம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 
கேரளாவில் அமல்படுத்தப்பட்டுள்ள இந்த நடவடிக்கை நாடு முழுவதும் விரைவில் அமல் படுத்த திட்டமிட உள்ளதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்