வேகமாக வந்த கார்களை ரிலீஸ் வீடியோ எடுத்த இளைஞர் பரிதாபமாக கார் மோதி பலியான சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே இளைஞர்கள் மத்தியில் ரீல்ஸ் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வரும் மோகம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சிலர் ஆபத்தான முறையில் ரிலீஸ் வீடியோக்களை எடுத்து விலைமதிப்பில்லா உயிரை இழந்து வரும் நிலையில் அதே மாதிரி ஒரு சம்பவம் கேரள மாநிலம் கோழிக்கோடு என்ற பகுதியில் நடந்துள்ளது.
ஆல்வின் என்ற 20 வயது இளைஞர் ஐக்கிய அரபு எமிரேடில் பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த வாரம் சொந்த ஊருக்கு வந்திருந்தார். அப்போது அவர் தனது நண்பர்களுடன் ரிலீஸ் வீடியோ எடுத்து கொண்டிருந்த நிலையில் கோழிக்கோடு கடற்கரைக்கு சென்றனர். அங்கு தனது கார் மற்றும் தனது நண்பர்களின் கார்களை பயன்படுத்தி வேகமாக வரும் காரை ரோட்டோரம் நின்று ஆல்வின் வீடியோ ரிலீஸ் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது அவரது நண்பர் ஓட்டி வந்த கார் எதிர்பாராத விதமாக ஆல்வின் மீது மோதியதை அடுத்து அவர் படுகாயம் அடைந்தார். இதனையடுத்து உடனடியாக அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு அவரது பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு விடுமுறைக்காக வந்த ஒரு சில நாட்களில் ஆல்வின் ரிலீஸ் வீடியோ மோகத்தால் பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.