வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கனமழை தொடர்ந்து வரும் நிலையில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழக மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ஏற்கனவே ஃபெஞ்சல் புயல் மழையால் ஏற்பட்ட பாதிப்பே இன்னும் முடியாத நிலையில் மீண்டும் தொடர் மழை பெய்வதால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
இந்நிலையில் 7 மாவட்டங்களில் நீர் நிலைகள் முழுவதுமாக நிரம்பியுள்ளதால் நீர் வழித்தடங்களில் வெள்ளம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டிணம் ஆகிய மாவட்டங்களில் வெள்ள அபாயம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் நீர் தேங்க வாய்ப்புள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K