இந்த நிலையில், இந்த மாநாட்டுக்கு சென்ற மேகநாதன் என்பவர் காணாமல் போய்விட்ட நிலையில், அவரை மீட்டு தர வேண்டும் என அவரது தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், மாநாட்டுக்கு சென்று மாயமான இளைஞரை சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என்றும், மாயமானவர் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு மாதத்திற்கு மேலாக, தமிழக வெற்றி கழகத்தின் மாநில மாநாட்டுக்கு சென்ற இளைஞரை கண்டுபிடிக்க முடியவில்லை என்ற தகவல், அவரது குடும்பத்தினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.