ஜனநாயகம் என்பது யாரும் நமக்கு அளித்த பிச்சையல்ல- ப.சிதம்பரம் டுவீட்

Webdunia
ஞாயிறு, 8 நவம்பர் 2020 (11:17 IST)
உலகமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் நேற்று இரவு வெளியானதை அடுத்து அமெரிக்காவின் 46 வது அதிபராகப் பொறுப்பேற்றுள்ள ஜோ பிடனுக்கும் துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது. விரைவில் இருவரும் பொறுப்பேற்கவுள்ளனர்.

இதுகுறித்து முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில், அமெரிக்க மக்களுக்கு நேற்று இரவு 9.56 மணிக்கு தீபாவளி தொடங்கியது

ஜனநாயகம் என்பது யாரும் நமக்கு அளித்த பிச்சையல்ல. மகாத்மா காந்தி தலைமையில் நாம் போராடி வென்றது. அந்த “வாராது போல் வந்த மாமணியை” ஒவ்வொரு நாளும் போராடிக் காப்பாற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்