ஜோபைடன், கமலாஹாரீஸ் வெற்றி: அதிகாரபூர்வ அறிவிப்பு

ஞாயிறு, 8 நவம்பர் 2020 (07:28 IST)
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மூன்றாம் தேதி நடைபெற்ற நிலையில் நவம்பர் 4 ஆம் தேதி முதல் கடந்த 5 நாட்களாக பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன
 
ஆரம்பத்திலிருந்தே அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் முன்னணியில் இருந்த நிலையில் தற்போது அவர் வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக ஜோ பைடன் தேர்வு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஜோபைடன் அவர்களுக்கு 284 கிடைத்துள்ளதாகவும் இதனையடுத்து அவர் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அமெரிக்காவின் துணை அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் அவர்களும் தேர்தலில் வெற்றி பெற்று உள்ளார் என்று என்றும் அவர் அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர் ஆகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இதனை அடுத்து பிரதமர் மோடி உள்பட உலக தலைவர்கள் வெற்றி பெற்ற ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகிய இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அவர்களும் இருவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்