ஆந்திர மாநில துணை முதல்வராக சமீபத்தில் பதவி ஏற்ற பவன் கல்யாண் திடீரென 11 நாட்களில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள்து.
சமீபத்தில் நடந்த ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில் தெலுகு தேசம், பாஜக மற்றும் ஜனசேனா ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிட்டு ஆட்சியைப் பிடித்தது.
இந்த நிலையில் ஆந்திராவின் முதல்வராக சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதல்வராக பவன் கல்யாண் பதவி ஏற்றுள்ள நிலையில் திடீரென பவன் கல்யாண் 11 நாட்கள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார்
ஆந்திர மாநில மக்களின் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நலனுக்காக இந்த உண்ணாவிரதம் இருப்பதாகவும் 11 நாட்கள் வாராகி தீட்சை விரதம் மேற்கொள்ள இருப்பதாகவும் அறிவித்துள்ளார்
வாராகி அம்மனை வழிபடும் இந்த உண்ணாவிரதம் கடினமானது என்றும் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் அவர் வாராஹி தேவியை வழிபட்டார் என்பதும் உண்ணாவிரதம் இருந்ததாகவும் கூறப்படுகிறது .