தமிழகத்தை போலவே தீர்மானம்.. சிறப்பு சட்டமன்றத்தை கூட்டும் டெல்லி முதல்வர்..!

Webdunia
சனி, 15 ஏப்ரல் 2023 (17:38 IST)
தமிழகம் போலவே தீர்மானத்தை இயற்றுவதற்காக சிறப்பு சட்டசபை கூட்டத்தைக் கூட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
கடந்த சில நாட்களுக்கு முன்ன தமிழக சட்டசபையில் ஆளுநர்கள் மசோதாக்களை நிறைவேற்றுவதற்கான காலகடுவை மத்திய அரசு நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற தீர்மானம் இயற்றப்பட்டது. 
 
மேலும் இந்த தீர்மானம் குறித்து பாஜக அல்லாத முதல்வர்களுக்கு கடிதம் எழுதிய தமிழக முதல் முக ஸ்டாலின் இதே போன்ற தீர்மானத்தை மற்ற மாநிலங்களிலும் இயற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். 
 
இந்த நிலையில் தமிழகத்தை போலவே டெல்லி சட்டப்பேரவையிலும் ஆளுநர்கள் மசோதாக்களை நிறைவேற்றதற்கான காலகடுப்பை மத்திய அரசு நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை இயற்ற டெல்லி அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக ஆளும் ஆம் ஆத்மி அரசு வரும் திங்கட்கிழமை சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடருக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்