சி.எஸ்.ஐ.ஆர் நெட் தேர்வு அட்டவணை.. தேசிய தேர்வு முகமை வெளியீடு..!

Siva
ஞாயிறு, 2 பிப்ரவரி 2025 (10:25 IST)
சிஎஸ்ஐஆர் நெட் தேர்வுக்கான அட்டவணை தேதிகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
 
பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரிய நெட் தேர்வில் தேர்ச்சி செய்ய வேண்டும் என்ற நிலையில் இந்த தேர்வை ஆண்டுக்கு இருமுறை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது.
 
அந்த வகையில் இந்த ஆண்டு சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு பிப்ரவரி மாதம் நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அதற்கான கால அட்டவணையை வெளியிட்டுள்ளது.
 
இதன்படி பிப்ரவரி 28 முதல் மார்ச் 2 வரை இந்த தேர்வு நடைபெற உள்ளதாகவும் ஆங்கிலம், ஹிந்தி ஆகிய இரண்டு  மொழிகளில் இந்த தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் இந்த தேர்வு தேதிகள் குறித்த சந்தேகம் இருந்தால் 011 40759000 ,  011 69227700 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றும் தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்