இந்தியா - இங்கிலாந்து டி20 போட்டியில் ஷிவம் துபேவுக்கு பதிலாக ஹர்ஷித் ராணா களம் இறக்கப்பட்டது குறித்து மைக்கெல் வாகன் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான 4 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இந்தியாவில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த நிலையில் இறுதி போட்டியில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது.
இந்த போட்டியில் முதலில் இந்தியா பேட்டிங் செய்தபோது ஜாமி ஓவர்டன் வீசிய பந்து ஷிவம் துபேவின் ஹெல்மெட்டில் அடித்ததால் அவர் பீல்டிங் செய்ய வரவில்லை. அவருக்கு பதிலாக ஃபீல்டிங் வந்த ஹர்ஷித் ராணா அந்த போட்டியில் பவுலிங் செய்து 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். பேட்ஸ்மேனான ஷிவம் துபேவிற்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணாவை அணிக்குள் கொண்டு வந்தது முறையற்றது என இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் உட்பட பலர் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கெல் வாகன் “ஷிவம் துபேவுக்கு பதிலாகா ராணாவை எவ்வாறு சரியான மாற்று என்று அவர்கள் கண்டறிந்தார்கள்? ஒரு பவுலர் எப்படி பகுதிநேரமாக பந்து வீசும் ஒரு பேட்ஸ்மேனுக்கு ஈடாக இருப்பார். அது என்னுடைய புரிதலுக்கு அப்பாற்பட்டு இருக்கிறது.
ஆனால் அதேசமயம் இங்கிலாந்து அணிக்கு இதுபோன்ற வாய்ப்பு கிடைத்திருந்தால் அவர்களும் இதைத்தான் செய்திருப்பார்கள்” என்று கூறியுள்ளார்.
Edit by Prasanth.K