கதறி அழுது வீடியோ போட்ட பாடகி செலினா கோம்ஸ்.. பதில் வீடியோ போட்ட வெள்ளை மாளிகை..!

Siva

ஞாயிறு, 2 பிப்ரவரி 2025 (17:23 IST)
பிரபல பாடகி செலினா கோம்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறிய தனது நாட்டினர் அவமரியாதையுடன் நடத்தப்பட்டதாக கூறி, கண்ணீருடன் ஒரு வீடியோ பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ வைரலாகிய நிலையில், வெள்ளை மாளிகை அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஒரு பதில் வீடியோ வெளியிட்டுள்ளது.
 
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதிலிருந்து, அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கி இருப்பவர்கள் நாடு கடத்தப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், மெக்ஸிகோவை சேர்ந்த அமெரிக்க பாடகி செலினா கோம்ஸ், தனது நாட்டு மக்கள் கொடுமைப்படுத்தப்படுவதாகவும், தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்றும் கூறி, கண்ணீர் வடித்த வீடியோ ஒன்றை பதிவு செய்தார். ஆனால், சில மணி நேரங்களிலேயே அவர் அந்த வீடியோவை நீக்கிவிட்டாலும், அது இணையத்தில் வைரலாகியது.
 
இதற்கு பதிலளிக்கும் வகையில், வெள்ளை மாளிகை ஒரு வீடியோ வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், சட்டவிரோதமாக குடியேறியவர்களால் கொல்லப்பட்ட மூன்று நபர்களின் தாய்மார்கள் கதறி அழும் காட்சிகளை பகிர்ந்துள்ளது. "நமது எல்லைகளை பாதுகாப்பதை எதிர்ப்பவர்களுக்கு, இந்த தாய்மார்கள் சொல்வதுதான் பதில்" என்று வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது. இதனால், இந்த விவகாரம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்