கனடா, மெக்சிகோவுக்கு 25% வரி.. சீனாவுக்கு எவ்வளவு? ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு,,!
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் பதவியேற்ற நிலையில், பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில் அண்டை நாடுகளான கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரி விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதேபோல், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10% வரி விதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இத்தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதனால் தான், மெக்சிகோ, கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு 25% வரியும், சீனாவுக்கு 10% கூடுதல் வரியும் அமல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். சட்டவிரோத அமெரிக்காவிற்குள் நுழையும் வெளிநாட்டினர், மக்களை பாதிக்கும் கொடிய போதைப் பொருட்களை விற்பனை செய்வது முக்கிய அச்சுறுத்தலாக இருப்பதால் இந்த வரி விதிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
"அமெரிக்க மக்களை நான் பாதுகாக்க வேண்டும். அனைவரின் பாதுகாப்பை உறுதி செய்வது எனது கடமை. வெளிநாட்டினரும், போதைப் பொருட்களும் நம்மை அதிகமான பிரச்சினைகளுக்கு உள்ளாக்கியுள்ளன. எனவே, எனக்கு வாக்களித்த மக்களை பாதுகாக்க இந்த வரி விதிக்கப்படுகிறது" என்று அவர் கூறியுள்ளார்.