சிஐஏ போராட்டத்தை தூண்டி விட்டதாக தம்பதிகள் கைது: ஐஎஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்களா?

Webdunia
திங்கள், 9 மார்ச் 2020 (08:40 IST)
சிஐஏ போராட்டத்தை தூண்டி விட்டதாக தம்பதிகள் கைது
டெல்லியில் சிஏஏ சட்டத்திற்கு எதிராக போராட்டத்தை தூண்டிவிட்டு வன்முறையை ஏற்படுத்த முயன்ற கணவன் மனைவியை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
டெல்லியில் கடந்த சில நாட்களாக சிஏஏ சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் சிஏஏ சட்டத்திற்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் நடந்த பேரணியில் வன்முறை வெடித்து பெரும் உயிர்ச்சேதம் நிகழ்ந்தது.
 
இந்த நிலையில் டெல்லியில் சிஏஏ சட்டத்திற்கு எதிராக போராட்டத்தை தூண்டி விட்டதாக கணவன் மனைவி இருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜகான்ஜேப் சமி, மற்றும் ஹீனா பஷீர் என்ற பெயர்களைக் கொண்ட இந்த தம்பதி, டெல்லி போராட்டத்தின்போது வன்முறையை தூண்டி விட்டதாகவும் அது மட்டுமின்றி இவர்கள் ஐ.எஸ்.ஐ. இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது 
 
கைது செய்யப்பட்ட இவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் காஷ்மீர் இளைஞர்களை மூளைச் சலவை செய்து இவர்கள் ஐஎஸ் இயக்கத்துக்கு ஆள் சேர்த்ததாகவும் தெரிய வந்துள்ளது இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்