மொத்தமாக மூடப்பட்ட இத்தாலி நகரம்: 6300ஐ தாண்டிய கொரோனா நோயாளிகள்

ஞாயிறு, 8 மார்ச் 2020 (15:41 IST)
மொத்தமாக மூடப்பட்ட இத்தாலி நகரம்
சீனாவில் வூகான் என்ற மாகாணத்தில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் கொஞ்சம் கொஞ்சமாக சீனா முழுவதும் பரவி 2000க்கும் அதிகமானோர்களை பலி வாங்கிவிட்டது. அதுமட்டுமின்றி ஆயிரக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
இந்த நிலையில் சீனாவை அடுத்து இத்தாலியில் கொரோனா வைரஸ் கடுமையாக தாண்டவமாகி வருகிறது. இதுவரை இத்தாலியில் 6300 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வைரஸ் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 230ஐ தாண்டிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
 
இதனையடுத்து கொரோனா வைரஸ் தாக்கம் அதிகம் உள்ள இத்தாலியின் லோம்பார்டி என்ற நகரம் மொத்தமாக சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டது. இந்த நகரில் இருந்து யாரும் வெளியே போகவும், இந்த நகருக்குள் யாரும் உள்ளே செல்லவும் முடியாது. மேலும் இத்தாலியில் உள்ள 16 மில்லியன் மக்கள் வீட்டில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். லோம்பார்டி நகரம் மட்டுமின்றி மிலன், வெனிஸ் உள்ளிட்ட வடக்கு பகுதியில் உள்ள நகரங்கள் பலவற்றை இத்தாலி அரசு தனிமைப்படுத்தி உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்