மாற்றத்தை நோக்கி இந்தியா: உலக நாடுகளோடு ஒப்பிடும் போது இந்த லிஸ்டில் டாப்!!

Webdunia
வெள்ளி, 9 அக்டோபர் 2020 (08:20 IST)
கொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. 
 
உலக அளவில் கொரோனா தொற்றால் 3,67,34,606 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர், இதுவரை 10,66,341 பேர் மரணம் அடைந்துள்ளனர், 2,76,29,679 பேர் குணமடைந்துள்ளனர் எனவும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. 
 
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 69,03,806 ஆக உயர்ந்துள்ளது. 106,521 பேர் மரணம் அடைந்துள்ளனர். கொரோனாவில் இருந்து 5,903,207 பேர் குணமாகியுள்ளனர். 
 
இந்நிலையில், கொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. இதனைத்தொடர்ந்து அமெரிக்கா, பிரேசில் போன்ற நாடுகள் உள்ளன. 
 
அதிக குணமைடைந்தோர் எண்ணிக்கை கொண்ட நாடுகள்:-
1. இந்தியா - 58,27,705
2. அமெரிக்கா - 50,16,139
3. பிரேசில் - 44,14,564
4. ரஷியா - 10,02,329
5. கொலம்பியா - 7,77,658

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்