கொரோனா விழிப்புணர்வு குறித்து சச்சின், பிவி சிந்துவுடன் பிரதமர் ஆலோசனை

Webdunia
வெள்ளி, 3 ஏப்ரல் 2020 (12:24 IST)
கொரோனா விழிப்புணர்வு குறித்து சச்சின்,
இந்தியாவில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து பிரதமர் மோடி அவ்வப்போது ஒரு சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதுமட்டுமின்றி கொரோனா குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அவர் அவ்வப்போது அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து வருகிறார்
 
இந்த நிலையில் சற்று முன்னர் சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, பிவி சிந்து,  ராணி ராம்பால், விராத் கோஹ்லி, புஜாரா, கே.எல்.ராகுல் உள்பட 40 விளையாட்டு வீரர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை செய்ததாகவும், விளையாட்டு வீரர்கள் கொரோனா குறித்த விழிப்புணர்வு பணியில் ஈடுபட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டதாகவும் தெரிகிறது
 
இதற்கு அனைத்து விளையாட்டு வீரர்களும் ஒத்துழைப்பு தருவதாக பிரதமரிடம் உறுதி அளித்ததாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இதனை அடுத்து மிக விரைவில் சச்சின், சிந்து உள்பட பலர் கொரோனா குறித்த விழிப்புணர்வு பணியில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்