சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் படிப்படியாக பரவி அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, ஈரான், ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள மனித இனத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், தற்போது இந்த நோய் உருவான இடமான சீனா இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. மக்களும் வீடுகள் விட்டு வெளியே வந்து தங்களது வேலைகளில் கவனத்தை செலுத்தி வருகின்றனர். இந்த நேரத்தில் மீண்டும் விலங்குகள் இறைச்சி கடைகளில் வவ்வால்கள், பாம்பு, எட்டுக்கால்பூச்சி, பல்லி, தேள் ஆகியவற்றின் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. மேலும் அங்குள்ள விற்பனையாளர்கள் இதையெல்லாம் சாப்பிட்டால் கொரோனா தடுக்கலாம் என கூறி விளம்பரம் செய்து விற்கின்றனர்.